
மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்று மூன்றாவது ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியது.
முதலில் களமிறங்கிய சென்னை அணி 2௦வது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து .ரெய்னா அவுட்டாகாமல் 57 ரன்களுடனும்,அனிருதா அவுட்டாகாமல் 6 ரன்களும் எடுத்தனர். மோர்கல் 15 ரன்களும் தோனி 22 ரன்களுக்கும், பத்ரிநாத் 14 ரன்களுக்கும் முரளி விஜய் 26 ரன்களுக்கும், ஹெய்டன் 17 ரன்களுக்கும் அவுட்டாயினர்.
இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 வது ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. 22ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மூன்றாவது ஐ.பி.எல் கோப்பையை சென்னை அணி கைப்பற்றியது. பந்து வீச்சில் 2 விக்கெட்களை கைப்பற்றிய ஜகடி மற்றும் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றிய போலிஞ்சர்,ரெய்னா,மோர்கல்,முரளிதரன் மும்பையை 146/9 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தினார்கள்.
சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் இவ்வளவு திறமையாக விளையாடுவார்கள் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டாது. பதற்றமான நேரத்தில் சிறப்பாக செயல்படும் டோனியே உலகின் மிகச் சிறந்த கேப்டன் என்று ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் போலிஞ்சர் கூறியுள்ளார். கேப்டனாக டோனி செயல்படும் விதம் பிரம்மிப்பாக உள்ளது. பதற்றமான நேரத்தில் ரெய்னாவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு அசத்துகிறார்.
57 ரன்கள் மற்றும் 1 விக்கெட்களை எடுத்த ரெய்னா ஆட்டநாயகனாக விருதுப்பேற்றார்.
IPL 2010 Final match 60, MI vs CSK, Full Highlights in Mumbai - HD part1


11:19 PM
Thomas Ruban
Posted in:

2 comments:
the real lions
//karikal.manimaran சொன்னது…
the real lions//
உண்மைதான், நன்றி நண்பரே.
Post a Comment
தைரியமாக கருத்துகளை கூறுங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு ஆட்டோ வராது...