Monday, June 9, 2014

FIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..


              20வது கால்பந்தாட்ட உலககோப்பை FIFA  world cup 2014 போட்டிகள், வரும் 12ம்தேதி பிரேசிலில் தொடங்குகின்றன. இம்மாதம் 12ம் தேதி  ஆரம்பித்து ஜூலை 13ம் தேதி வரை நடக்கவிருக்கும் போட்டிகளுக்காக 736 வீரர்கள் மொத்தமாகப் பங்கேடுக்கவுள்ளனர்.

          FIFA World Cup 2014 is upon us all! It’s the biggest event in the world! It will be the 20th FIFA World Cup and will take place in Brazil from June 12 to July 13 2014. This will be the second time that Brazil will host the competition.  The World Cup kicks off on 12 June, but technically it will be 13 June in India by then. Brazil being eight hours behind India, most of the matches will be played late at night.

          2014 உலகக் கிண்ணப் போட்டிகளில் 32 அணிகளிலிருந்து மொத்தமாக 736 வீரர்கள். ஒவ்வொரு அணியிலும் தலா 23 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
உலகக் கிண்ணக் கால்பந்தின் முதல் ஆட்டத்துக்கு உலகமே காத்திருக்க,
 ஆரம்ப விழா வரும் 12ம் தேதி  இந்திய  நேரப்படி இரவு 11 மணிக்கு பிரேசில் தலைநகரம் ரியோ டி ஜெனீரொவில் இடம்பெறவுள்ளது 
முதலாவது போட்டி போட்டிகளை நடத்தும் பிரேசில் அணிக்கும் குரோஷிய அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ளது.

          இதில் போட்டியை நடத்தும் பிரேசில், நடப்பு சாம்பியன் ஸ்பெயின் உள்பட 32 அணிகள் கலந்து கொள்கின்றன. பிரேசில் தவிர மற்ற 31 அணிகளும் தகுதி சுற்று மூலமே பிரதான சுற்றுக்கு முன்னேறின.
போட்டியை நடத்த  பிரேசில் அரசு ரூ.84 ஆயிரம் கோடி செலவழித்து உள்ளது. வேறு எந்த உலக போட்டியிலும் இவ்வளவு தொகை செலவழிக்கப்பட்டது இல்லை. இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3450 கோடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

----------------------

 Group A : பிரேசில், குரோஷியா, மெக்சிகோ, கேமரூன்

Group B : ஸ்பெயின், நெதர்லாந்து, சிலி, ஆஸ்திரேலியா

Group C : கொலம்பியா, கிரீஸ், ஐவரி கோஸ்ட், ஜப்பான்

Group D: உருகுவே, கோஸ்டாரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி

Group E : சுவிட்சர்லாந்து, ஈகுவடார், பிரான்ஸ், ஹோன்டுராஸ்

Group F: அர்ஜென்டினா, போஸ்னியாஹெர்சகோவினா, ஈரான், நைஜீரியா

 Group G: ஜெர்மனி, போர்ச்சுகல், கானா, அமெரிக்கா

Group H: பெல்ஜியம், அல்ஜீயா, ரஷியா, கொரியா.

                               இங்கிலாந்து கிங் ரூனே, ஸ்பெயின் அணியின் ஆன்ட்ரஸ் இனியேஸ்டா, பிரேசில் நாட்டுக்காரரான 22வயது நெய்மார், போர்ச்சுக்கல் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெதர்லாந்து அணியின் முக்கிய வீரர் அர்ஜென் ரொப்பன், இத்தாலி நாட்டு ஆண்ட்ரியா பிர்லோ,ஜெர்மனி அணியின் 22 வயது மிட் பீல்டரான மரியோ கோட்ஸ், உருகுவே அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரேஸ்,ஐவரி கோஸ்ட் அணியின் யயா டூரே, அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்சி., இங்கிலாந்து ஆட்டக்காரர் வெய்ன்ரூனே , அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்த சிறந்த முன்னணி வீரர்களின் பட்டியலில் இந்த பத்துப் பேருக்கும் கண்டிப்பாக இடம் உண்டு.

டு
World Cup 2014: Last 16 Group Knockout stage

மாதம்/ தேதி(நாள்)இந்தியநேரம் மோதும் அணிகள்கோல்கள்
June 28(Saturday)9.30 p.m Brazil -3vs.Chile-2   1-1(3-2)
June 29(Sunday) 1.30 A.m Colombia-2 vs. Uruguay-0     2 -0
June 29(Sunday) 9.30 p.m Netherlands-2 vs. Mexico-1     2-1
June 30(Monday)1.30 A.m Costa Rica -5vs. Greece-3  1-1(5-3)
June 30(Monday) 9.30 p.m France -2vs. Nigeria-0     2-0
July 1 (Tuesday)1.30 A.m Germany-2vs. Algeria-1     2-1
July 1 (Tuesday) 9.30 p.m Argentina- 1vs. Switzerland-0    1-0
July 2(Wednesday)1.30 A.m Belgium -2vs. USA-1    2-1
--------------------World Cup 2014: Quarter-finals


தேதி(நாள்)இந்தியநேரம் மோதும் அணிகள்கோல்கள்
July 4(Friday) 9.30 p.m France -0vs. Germany-1    0 -1
July 5 (Saturday )1.30 A.m Brazil-2  vs. Colombia=1    2-1
July 5 (Saturday ) 9.30 p.m Argentina-1vs. Belgium-0   1- 0
July 6(Sunday)1.30 A.m Netherlands-0 Vs Costa Rica -00-0(4-3)World Cup 2014: Semi-finals
தேதி(நாள்)இந்தியநேரம் மோதும் அணிகள்கோல்கள்
July 9 (Wednesday) 1.30 A.m Brazil-1  vs. Germany-7   7-1
July 10 (Thursday)1.30 A.m Argentina-0vs. Netherlands-00-0(4-2)

World Cup 2014: Play-off for third place
தேதி(நாள்)இந்தியநேரம் மோதும் அணிகள்கோல்கள்
July 13(Monday) 1.30 A.m Brazil-0vs. Netherlands-3   0-3
World Cup 2014: FINAL
தேதி(நாள்)இந்தியநேரம் மோதும் அணிகள்கோல்கள்
July 14(SUNDAY ) 12.30 A.m Germany -1vs. Argentina=0    1-0


----------
golden goal

(FINAL Germany 1:0 Argentina)


Lionel MESSI-Argentina
The adidas Golden Ball was awarded to Argentina captain Lionel Messi for his outstanding displays at Brazil 2014. 
                                                            James RODRIGUEZ-Colombia
The adidas Golden Boot award goes to the top goalscorer at the FIFA World Cup who at Brazil 2014 was Colombia's James Rodriguez. 
                                                         Manuel NEUER-Germany
The adidas Golden Glove goes to the tournament's most outstanding goalkeeper who at Brazil 2014 was deemed to be Germany's Manuel Neuer. 

»

Saturday, January 21, 2012

"என்றென்றும் ராஜா" Endrendrum Raja - Musical Full show. (2011-2012)
              பிரகாஸ்ராஜ் தொகுத்து வழங்கிய, ஜெயா டி.வி யின் "என்றென்றும் ராஜா" லைவ் தாமதமாக ஆறு பதினைந்து மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி முடிவதற்கு கிட்டத்தட்ட பனிரெண்டு மணி ஆகிவிட்டாலும் இந்த பாட்டு இல்லையே , அந்த பாட்டு இல்லையே என்ற ஏக்கத்துடனேயே ரசிகர்களை கலைய வைத்தது இசைஞானியின் இசை ...  குரு வணக்கத்துடன் துவங்கிய நிகழ்ச்சி இசைஞானியின் குரலில் "ஜனனி ஜனனி" யில் ஆரம்பித்து எஸ்.பி.பி. யின் குரலில் " இளமை இதோ இதோ " வில் முடிவடைந்தது.

         கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பி, பால முரளி கிருஷ்ணா, சின்ன குயில் சித்ரா, ஹரிஹரன், தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன், ஹரிச்சரனும் பாடினார்கள். பாடல்கள் பாடியதோடல்லாமல் நடு நடுவே சிம்பொனி , பாடல் Kம்போசிங்கில் பாரதிராஜா எப்படி பேசுவார் என்றெல்லாம் சுவைபட விசயங்களை சொல்லி ரசிக்க வைத்தார்.யுவன் கமலை போல மிமிக்ரி செய்து எல்லோரையும் சிரிக்க வைத்தார்." பா " , " அழகர் சாமியின் குதிரை " போன்ற படங்களின் பின்னணி இசையும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன
பிரகாஸ்ராஜ் தொகுத்து வழங்கிய ஜெயா டி.வி யின் "என்றென்றும் ராஜா" லைவ் இன் கான்சர்ட்டின் சில முக்கிய அம்சங்கள் இதோ :

 குரு வணக்கத்துடன் துவங்கிய கான்சர்ட் இசைஞானியின் குரலில்
"ஜனனி ஜனனி" யில் ஆரம்பித்து எஸ்.பி.பி. யின் குரலில் " இளமை இதோ இதோ " வில் முடிவடைந்தது

"அம்மா என்றழைக்காத" பாடலை பாட கே.ஜே.யேசுதாசை இசைஞானி அழைத்தவுடன் கூட்டத்தில் ஒரே கரகோஷம் ... " என் இனிய", "பூவே செம்பூவே" போன்ற மெலடி பாடல்களை பாடிய கே.ஜே முடிவில் "வச்ச பார்வை" என்ற குத்து பாடலையும் பாடி ரசிகர்களை அசர வைத்தார் ... " பூவே " பாடலில் இசை முடிவதற்கு முன்னரே இவர் பாட ஆரம்பித்து விட்டதால் அரங்கத்தில் பெரிய சலசலப்பு , பின் இருமுறை அவர் பாடிய பிறகே சலசலப்பு அடங்கியது ... பாடகரையும் , பாடல் வரிகளையும் தாண்டி இசைஞானியின் பின்னணி இசையின் மேல் ரசிகர்கள் வைத்திருக்கும் வெறித்தனமான பக்திக்கு இந்த சம்பவம் சிறந்த உதாரணம்

      இவரை நேரே பார்க்காதவர்கள் குரலை மட்டும் கேட்டால் நிச்சயம் இருபத்தைந்து வயதிற்கு மேல் சொல்ல மாட்டார்கள் ... அறுபத்தைந்தை தாண்டியும் குரலை அதே இனிமையில் வைத்திருக்கும் எஸ்.பி.பி யே ஷோவின் ஹைலைட் ... கான்சர்டில் அதிக பாடல்கள் பாடியவரும் இவரே...
" நானாக நானில்லை " யில் ஆரம்பித்து " மடை திறந்து " , " கண்மணியே காதல் " , " சுந்தரி கண்ணால் " என்று மெலடிகளால் நம்மை கட்டிப் போட்டவர் " இளமை இதோ " வில் முடிக்கும் போது ஆட வைத்துவிட்டார் ... பாடல்களுக்கு நடுவில் எஸ்.பி.பி யின் இம்ப்ரோவைசெஷன் அருமை ***

    இசைஞானி தன் குரலில் " ஜனனி " , " நான் தேடும் " , " ஒரு ஜீவன் " , அவரே முதன் முதலில் எழுதிய " இதயம் ஒரு கோவில் " என்று பாடல்கள் பாடியதோடல்லாமல் நடு நடுவே சிம்பொனி , பாடல் கம்போசிங்கில் பாரதிராஜா எப்படி பேசுவார் என்றெல்லாம் சுவைபட விசயங்களை சொல்லி ரசிக்க வைத்தார் ... தொகுத்து வழங்க வேண்டிய பிரகாஷ்ராஜும் ஒரு பார்வையாளராக இதை ஓரமாக நின்று ரசித்துக்கொண்டிருந்தார்

      உலகநாயகனால் நேரில் வர முடியாததால் அவர் பேசியதை வீடியோவில் காட்டினார்கள் ... கமல் பாடிய " சுந்தரி நீயும் " பாடலை ஹரிச்சரனும் , "நினைவோ ஒரு பறவை " , " ராஜா கைய வச்சா" பாடல்களை யுவனும் பாடினார்கள் ... யுவன் கமலை போல மிமிக்ரி செய்து எல்லோரையும் சிரிக்க வைத்தார்

 தன் வசீகரிக்கும் குரலில் " சின்ன கண்ணன் " பாடலை பாடி முடித்தவுடன் பால முரளி கிருஷ்ணாவும் இசைஞானியும் இறுக தழுவிக்கொண்ட காட்சி உருக்கமாக இருந்தது ... பாடலை கேட்கும் போது ஜேம்ஸ் வசந்தனின் "கண்கள் இரண்டால் " பாடல் நினைவிற்கு வந்தது.
சின்ன குயில் சித்ரா " புத்தம் புது காலை " , " பருவமே " , " சுந்தரி " உட்பட பல பாடல்களை பாடி உருக வைத்தார்

ஹரிஹரன் " நீ பார்த்த" பார்வையில் ராகத்தை மாற்றினாலும் குரலில் கிறங்கடித்தார் ... " என் மன வானில் " பாடலை சுருதி பிசகாமல் பாடினாலும் தமிழ் உச்சரிப்புகளை கொஞ்சம் கொலை செய்தார்

 தீபன் சக்ரவர்த்தி - உமா ரமணன் குரலில் " பூங்கதவே " , கார்த்திக் - நான்சி குரலில் " ஏதோ மோகம் " , ஸ்ரீராம் குரலில் " இளங்காத்து வீசுதே " , பவதாரிணி குரலில் " கும் சும் " ஹிந்தி பாடல் இவையெல்லாம் சொக்க வைத்த மற்ற பாடல்கள் சிம்பொனி பின்னணியில் இசைஞானி பாடிய " இதயம் போகுதே " இரண்டே வரிகளானாலும் இதயத்தை வருடியது ..." பா " , " அழகர் சாமியின் குதிரை " போன்ற படங்களின் பின்னணி இசையும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன

 " சீனி கம் " , " பா " போன்ற படங்களின் இயக்குனர் பால்கி இந்தியாவிலேயே பின்னணி இசையில் உண்மையான இசை இயக்குனர் இசைஞானி ஒருவர் தான் என்று புகழாரம் சூட்டியதோடு மட்டுமல்லாமல் இவர் பின்னணி இசையிலிருந்து தழுவி பல பாடல்களுக்கு இசையமைக்கலாம் என இளம் இசையமைப்பாளர்களுக்கு டிப்சும் கொடுத்தார்...இதை ஏற்கனவே பல இசையமைப்பாளர்கள் செய்து கொண்டு தானிருக்கிறார்கள்

   ஆறு வருடங்களுக்கு முன் இதே அரங்கத்தில் நடந்த இசைஞானியின் முதல் கான்சர்டில் இடம்பிடித்த மனோ , சாதனா சர்கம் , ஸ்ரேயா கோசல் போன்றோர் இதில் மிஸ்ஸிங் ... அதே போல் சினிமா பாடல்கள் தவிர இசைஞானியின் கீதாஞ்சலி உட்பட மற்ற ஆல்பங்களிலிருந்து பாடல்கள் இடம் பெறாததும் சற்று ஏமாற்றமே

 கமல் தன் வீடியோ உரையில் குறிப்பிட்டது போல இசைஞானி தன்னுடைய சோகத்தை மறைத்து தன் இசையின் மூலம் மற்றவர்களின் சோகத்தை குறைக்கிறார் என்பது தன்னுடைய துணைவியார் ஜீவா இறந்து சில காலமே ஆன நிலையிலும் தன் இசை வெள்ளத்தால் எல்லோரையும் நேற்று கவலைகளை மறக்க செய்த இந்த இசை நிகழ்ச்சியின் மூலம் புலனாகிறது.பிரகாஸ்ராஜ் தொகுத்து வழங்கிய, ஜெயா டி.வி வழங்கிய "என்றென்றும் ராஜா" youtube ல் பார்க்க (Endrendrum Raja - Musical Full show (2011-2012) கிளிக்குங்கள்.

Endrendrum Raja - Musical Full show. (2011-2012)


நினைவோ ஒரு பறவை  , ஜேசுதாஸ் பாடிய வச்ச பார்வை தப்பாதடி ஆகிய சில பாடல்கள் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பவில்லை! :((


பிரகாஸ்ராஜ் தொகுத்து வழங்கிய, ஜெயா டி.வி வழங்கிய "என்றென்றும் ராஜா" டவுன்லோட் செய்ய(MKV733MB) Download-  Endrendrum Raja - Musical Full show (2011-2012) கிளிக்குங்கள்:-)))

 மேலே இருக்கும் லிங்கில் உள்ள வீடியோவை விட இன்னமும் தரமான வீடியோவை தரவிறக்க... 
DVDவீடியோபகுதி ஒன்று 

DVDவீடியோபகுதி இரண்டு

»

Saturday, December 31, 2011

புத்தாண்டு வாழ்த்துகள்-HAPPY NEW YEAR

           »

Friday, November 11, 2011

பிரபல ஹோஸ்ட் தளங்களில் இருந்து வேகமாகவும் தொடர்ச்சியாக பதிவிறக்க புதிய பதிப்பு MIPONY vI.5.2                          Mipony மென்பொருள் பிரபல ஹோஸ்ட் தளங்களில் இருந்து வேகமாகவும்,  சில வெப் 
ஹோஸ்ட் தளங்களில் இருந்து தொடர்ச்சியாகவும் பதிவிறக்க புதிய பதிப்பு MIPONY vI.5.2  உதவுகிறது. இதன் முக்கியமான மற்றோரு உபோயோகம் என்னவென்றால் நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய கோப்பு லிங்க் உள்ளதா பதிவிறக்கம் செய்ய முடியுமா என்பதையும், அதன் அளவு பதிவிறக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.

உபோயோகிக்கும் முறை:-

 முதலில்  MIPONY vI.5.2  தரவிறக்கி உங்கள் சிஸ்டத்தில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். பின்பு அதில் options ல் போய்  Browse கிளிக் செய்து  உங்கள் கோப்பு எந்த இடத்தில் வேண்டுமோ அதை தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். வேண்டிய மாற்றங்களை செய்து OK செய்துக்கொள்ளுங்கள்.

 


 உங்களிடம் பிரபலமான ஹோஸ்ட் தளங்களில் பிரீமியம் கணக்கு இருந்தால்  அதன் UN மற்றும் PW  கொடுத்து OK செய்யுங்கள்.  Mipony Rapidshare, Megaupload மற்றும் Hotfile பிரிமியம் மற்றும் இலவச இரு கணக்குகள்  ஏற்கிறது . பிரீமியம் கணக்கு இல்ல விட்டாலும் பரவாயில்லை. அனைத்து தளங்களிலும் நாம் பிரிமியம் பயனாளர் கணக்கு வைத்திருந்தால் தான் வேகமாகவும் தொடர்ச்சியாகவும் தரவிரக்கலாம் என்று இல்லாமல் பிரியம் அக்கவுண்ட் இல்லாமலும் நாம் இது போன்ற தளங்ககளில் இருந்து தரவிரக்கத்திற்கு உதவும். 


பின்பு நீங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டிய எத்தனை லிங்கை வேண்டுமானாலும் காப்பி செய்தால், அது MIPONY ல் காப்பியாகி விடும்.  லிங்க் உள்ளதா, பதிவிறக்கம் செய்ய முடியுமா,  என்பதையும்,அதன் அளவு பதிவிறக்க எவ்வளவு நேரம் ஆகும்,  என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.
  

          MIPONY ல் உங்கள் கோப்புகள் பச்சை நிறத்தில் டிக்மார்க் இருந்தால் அதை டவுன்லோட் செய்யலாம். சிகப்பு நிறத்தில் X மார்க்  இருந்தால் அதை டவுன்லோட் செய்ய முடியாது.
      
         MIPONY ல் பச்சை நிறத்தில் டிக்மார்க் உள்ள கோப்புகளை தேர்ந்தேடுத்து  ரைட்கிளிக் செய்து டவுன்லோட் செய்யலாம். ZIDDU, Rapidshare, Megaupload , mediafire, கேப்ட்ஷா இல்லாமல் உடனே  டவுன்லோட் செய்யலாம்.இதில் டவுன்லோட் போட்டு மினிமைஸ் செய்து விட்டு உங்களின் மற்ற வேலைகளையும் பார்க்கலாம். உங்களுடைய இணைய இணைப்பின் உண்மையான வேகத்தில் டவுன்லோட் ஆகும்.

                     filesonic , fileserver , தளங்களில் captcha  கேட்க்கும்.  filesonic,  Megaupload , ZIDDU,  mediafire,  போன்ற தளங்களில் இடையில் தடை ஏற்ப்பட்டாலும் பின்பு , தொடர்ந்து டவுன்லோட் ஆகும். உபோயோகித்துப் பாருங்கள்.  பலன் அடையுங்கள். . இந்த மென்பொருள் அதிகமாக பிரபல  ஹோஸ்ட் தளங்களில் இருந்து தரவிரக்கம் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


புதிய பதிப்பு MIPONY vI.5.2 தரவிறக்கம் செய்ய 7MB

 | Ziddu | Rapidshare | MegaUpload | FileFactory | HotfileMediafire

»

Saturday, July 30, 2011

தங்கம் சொக்கத்தங்கம்- சில அறிந்த, அறியாத தகவல்கள்GOLD IS ALWAYS GOLD
இதுவரைக்கும் கண்டுபிடிக்க பட்ட தனிமங்களிலே தங்கமும் ,பிளாட்டினம் மட்டுமே காற்று, நீர், அமிலம் இதனால் பாதிக்கபடாது. தங்கம், பிளாட்டினம் போல் மற்ற தனிமங்களையும் மாற்றுவதற்கு வேதியியல் ஆராச்சியாளர்கள் ரொம்ப வருடங்களாக முயன்றும் இன்னும் வெற்றிப்பெற முடியவில்லை

ஒருத்தருடைய குணநலன்கள் நன்றாக இருந்தால் அவரை சொக்கத்தங்கம் என்கிறார்கள். (சொக்கத்தங்கம்= பரிசுத்தம் ) சொக்கத் தங்கம் என்றழைக்கப் படும் சுத்தமான தங்கம், 24 காரட் மதிப்புடையது. நேர்த்தியான நிலையில், 100 சதவீதம் சுத்தமான இத்தங்கம், நகை செய்ய உகந்தது அல்ல. நகைக்கு பயன்படுத்தப்படும் தங்கம் 22 காரட் உடையது என பரவலாக சொல்லப்படுகிறது. இது 91.67 சதவீதம் சுத்தமான தங்கம்.

ஒரு கிராம் தங்கம் விலை 2,201 ரூபாயைத் தாண்டிவிட்டது. மிக விரைவில் கிராம் 2,500 ரூபாயையோ, சவரன் 22 ஆயிரம் ரூபாயையோ எட்டினால் வியப்பதற்கில்லை.அந்த உயரம்,வெகு தூரமில்லை என்கின்றனர் நகை வியாபாரிகள்.

இப்படி நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலைக்கும் உள்ளூர் வியாபாரிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; மொத்தத்தையும் தீர்மானிப்பது, வெறும் 14 பேர் தான். பிரிட்டன் தலைநகர் லண்டனில், புல்லியன் எக்சேஞ்ச் ஒன்று இருக்கிறது. நம்மூர் பங்குச் சந்தைகள் மாதிரி, தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் சந்தை இது தான். இதில் 14 வங்கிகள் பங்குதாரர்களாக உள்ளன.

இவற்றில் 11 வங்கிகள் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவை. இவை தங்கச் சுரங்கங்களுடன் ஒப்பந்தம் செய்து, உற்பத்தி அளவுக்கேற்ப மார்க்கெட் விலையை நிர்ணயிக்கின்றன. உற்பத்தி மற்றும் தேவையை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்துவது இந்த புல்லியன் எக்சேஞ்ச் தான். இதில், உறுப்பினர்களாக உள்ள வங்கிகள் கூடி, இன்று இதுதான் விலை என்று அறிவித்தால், உலகம் முழுவதும் அன்றைய விலையாக, அதுவே தீர்மானிக்கப்படும்.

அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தாலோ, தங்கச் சுரங்கங்களில் உற்பத்தி குறைந்தாலோ, கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலோ, பணவீக்கம் அதிகரித்தாலோ, தங்கத்தில் முதலீடு செய்வதும், அதன் தேவையும் அதிகரித்துவிடுகிறது. உடனே அன்றைய மார்க்கெட் விலையை, லண்டன் புல்லியன் அதிகரித்துவிடுகிறது.

சீனாவிடம் இப்போது 3 லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள அன்னியச் செலாவணி கையிருப்பு உள்ளது. இதில் தங்கத்தின் அளவு 1.8 சதவீதமாகும்.

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியில் தங்கத்தின் பங்கு 11 சதவீதமும்.

சீனாவும் 11 சதவீதம் அளவுக்கு தங்கத்தை வாங்கி வைக்க முடிவு செய்தால், அந்த நாடு 6,000 டன் தங்கத்தை வாங்க வேண்டியிருக்கும். இது ஓராண்டில் சர்வதேச அளவில் உற்பத்தியாகும் தங்கத்தைவிட இரண்டு மடங்காகும்.
இதனால் சீனா தங்கம் வாங்க ஆரம்பித்தால், அதன் விலை பல மடங்கு அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை ரூ.13.95 லட்சம் கோடி அளவுக்கு அன்னியச் செலாவணி கையிருப்பு உள்ளது. இதில் தங்கத்தின் பங்கு 8.2 சதவீதமாகும்.
தங்கம் உற்பத்தியில் உலக அளவில் தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் உலக அளவில் தங்கம் உற்பத்தி ஆண்டிற்கு 0.7 சதவீதம் மட்டுமே அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் தங்கத்தை வாங்குவதில் முதலிடத்தில் உள்ளது இந்தியா, இரண்டாவது இடத்தில் உள்ளது சீனா. இந்த இரு நாடுகளும் உலகத்தில் விற்பனையாகும் தங்கத்தில் 33 சதவீதத்தை வாங்குகின்றன.
அமெரிக்காவின் கடன் கொள்கை காரணமாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது

உலகிலேயே சக்திவாய்ந்த அமெரிக்க அரசின் கஜானாவில் 73.76 பில்லியன் டாலர் உள்ளது. ஆனால் உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளிடம் 75.87 பில்லியன் டாலர் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் இரு முக்கிய கட்சிகள் தேசத்தின் கடன் வரம்பை உயர்த்துவது குறித்து சண்டைப் போட்டுக்கொண்டுள்ளன.

அமெரிக்காவின் கடன் நெருக்கடியைத் தீர்க்க விரைவில் ஒரு முடிவு எடுக்காவிட்டால், உலகப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்' என, சர்வதேச நிதியமைப்பின் (ஐ.எம்.எப்.,) தலைவர் கிறிஸ்டைன் லகார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில், பிரதிநிதிகள் சபையில் சபாநாயகர் ஜான் பாய்னர் நேற்று கொண்டு வருவதாக இருந்த மசோதா தாக்கல், பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த இழுபறியால், உலக முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். அமெரிக்கா தன் கடன் உச்சவரம்பான 14.3 டிரில்லியன் டாலரை, கடந்த மே மாதம் எட்டிவிட்ட நிலையில், கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சிகள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சித் தரப்பில் மேற்கொள்ளப்பட்டன.

தங்கம் விலை நிர்ணயத்தின் முக்கிய காரணியாக, ஆன்-லைன் வர்த்தகம் தான் செயல்படுகிறது. ஆன்-லைனில்,பேப்பர் கோல்டு எனப்படும் கோல்ட் இ.டி.எப பண்டுகளில் அல்லது கமட்டிசந்தையில் ஒப்பதந்தின் மூலம் எந்த நேரடி பணப் புழக்கமும் இல்லாமல், வெறுமனே, இன்றைக்கு எனக்கு இத்தனை கிலோ தங்கம் ஒதுக்கிவையுங்கள்' என பதிவு செய்துவிட்டால், உங்கள் கணக்கில் அந்தத் தங்கம் சேர்க்கப்படும்.
ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் தனி மனிதத் தேவைக்குப் பயன்படும் தங்கத்தை, அமெரிக்காவில் இருக்கும் ஒரே ஒரு வர்த்தகரே ஆன்-லைன் மூலம் பதிவு செய்துவிடுகிறார். இப்படித்தான், செயற்கை முறையில் தங்கத்தின் தேவை அதிகரிக்கப்படுகிறது. இந்தியாவில் தங்கம் வாங்குவோரில், 80 சதவீதம் பேர் நடுத்தர வர்க்கத்தினர் தான்.

20 சதவீதம் வாடிக்கையாளர்கள் தான் செல்வந்தர்கள். விலை உயர்வால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவது, நடுத்தர வர்த்தக பாமர சராசரி மக்கள் தான். இந்த அதிரடி விலை உயர்வால், தங்கள் அவசியத் தேவைக்கு கூட தங்கம் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். அந்த வகையில், தங்கம் விலையை 90 சதவீதம் ஆன்-லைன் வர்த்தகமும், 10 சதவீதம் மட்டுமே தனிமனிதத் தேவையும் நிர்ணயிக்கிறது.பிரபல முதலீட்டு ஆலோசகரான நாகப்பன் ஐயாவின் ஆலோசனைகள்


தங்கத்தில் முதலீடு செய்வது என்று நீங்கள் முடிவெடுத்துவிட்டால், அதை தங்க உலோகமாக வாங்குவதற்கு பதிலாக தங்கப் பத்திரமாக வாங்குவதுதான் பாதுகாப்பு. தங்கத்தில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தாலும் செய்கூலி, சேதாரம், கற்கள் என்று எல்லாவற்றுக்கும் சேர்த்துதான் விலை நிர்ணயிக்கிறார்கள். அதை விற்கும்போது வாங்கிய விலையைவிட குறைவாகத்தான் தங்கத்தை மதிப்பிடுகிறார்கள்.

அதுவே, ETF முறையில் முதலீடு செய்தால் இப்படி எந்தப் பிரச்னையும் இருக்காது. தங்கத்தின் விலை ஏறுகிற போதெல்லாம் உங்கள் முதலீடும் லாபம் பார்த்துக் கொண்டே இருக்கும். விற்கும்போது அன்றைய தங்கத்தின் மதிப்பு என்னவோ அதே விலை உங்களுக்குக் கிடைக்கும். தங்கத்தின் விலை ஏற்றத்தை சமீபகாலமாக பார்த்து இருப்பீர்கள். ஏறுவதுதான் அதிகமாக இருக்கிறதே தவிர, விலை குறைவது ரொம்ப ரொம்பக் குறைவு. அதனால், தாராளமாக ETFஇல் முதலீடு செய்யலாம். இதற்கு ஒரு டிமேட் அக்கவுண்ட் தேவை. அதைத் துவங்கிவிட்டால் ஆன்லைனிலேயே நீங்கள் தங்கத்தை வாங்கலாம், விற்கலாம். 24கேரட் தங்கத்தின் விலை என்னவோ, அதே மதிப்புதான் ETFஇன் விலையும்.

ETF மாதிரியே இன்னொரு வகையிலும் முதலீட்டு வாய்ப்பு இருக்கிறது. இது National Spot Exchange Limited திட்டம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது எல்லாருக்கும் சுலபமாக இருக்கும். காசு இருக்கும்போதெல்லாம் தங்கம் வாங்குவது மாதிரிதான் இந்தத் திட்டமும். ஒரு கிராம் தங்கம் வாங்க நினைத்தால் அதே அளவு பணத்தை NSELஇல் முதலீடு செய்யலாம். எட்டு கிராம் அளவுக்கு மதிப்பு வந்தபிறகு 1 பவுனில் நகை வாங்க நினைத்தால் ஸ்டாக் மார்க்கெட்டில் கைமாற்றிவிட்டு நகையை வாங்கிக்கொள்ள முடியும். 100 சதவீதம் உங்கள் பணத்துக்கு கேரண்டி தரக்கூடியது. இதில் செய்கூலி, சேதாரம் என்று பணத்தை வீணாக்காமல், போட்ட பணத்தைவிட அதிகமாகவே கிடைக்கும். அதனால், தங்கம் வாங்கும்போது, அய்யோ பத்திரமாக பார்த்துக்கணுமே... தெருவில் யாராவது பறித்துக்கொண்டு போகாமல் இருக்கணுமே என்கிற பயம் எக்ஸ்சேன்ச் ட்ரேட் ஃபண்ட் (ETF), நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ் (NSEL) முதலீட்டில் இருக்காது.
தினமும் நடக்கிற கொலைகளிலும் வழிப்பறிகளிலும் மூன்றில் ஒன்றாவது தங்கத்துக்காக நடக்கிறது. அதைத் தவிர்க்க ஒரே வழி உலோகமாக வாங்கு வதற்கு பதிலாக, இப்படி பத்திரமாக வாங்கி உங்கள் முதலீட்டை பத்திரப் படுத்திக்கொள்ளுங்கள்.


அதிகரித்து வரும் தங்கம் விலை பற்றி பல்வேறு நிபுணர்களின் விஜய் டிவியில் கூறிய பல்வேறு கருத்துக்கள்:-(தகவல்கள் பல்வேறு இணையத்தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளது. குறைகளை சுட்டிக்காட்டுங்கள்)
»

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More