Saturday, January 21, 2012

"என்றென்றும் ராஜா" Endrendrum Raja - Musical Full show. (2011-2012)
              பிரகாஸ்ராஜ் தொகுத்து வழங்கிய, ஜெயா டி.வி யின் "என்றென்றும் ராஜா" லைவ் தாமதமாக ஆறு பதினைந்து மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி முடிவதற்கு கிட்டத்தட்ட பனிரெண்டு மணி ஆகிவிட்டாலும் இந்த பாட்டு இல்லையே , அந்த பாட்டு இல்லையே என்ற ஏக்கத்துடனேயே ரசிகர்களை கலைய வைத்தது இசைஞானியின் இசை ...  குரு வணக்கத்துடன் துவங்கிய நிகழ்ச்சி இசைஞானியின் குரலில் "ஜனனி ஜனனி" யில் ஆரம்பித்து எஸ்.பி.பி. யின் குரலில் " இளமை இதோ இதோ " வில் முடிவடைந்தது.

         கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பி, பால முரளி கிருஷ்ணா, சின்ன குயில் சித்ரா, ஹரிஹரன், தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன், ஹரிச்சரனும் பாடினார்கள். பாடல்கள் பாடியதோடல்லாமல் நடு நடுவே சிம்பொனி , பாடல் Kம்போசிங்கில் பாரதிராஜா எப்படி பேசுவார் என்றெல்லாம் சுவைபட விசயங்களை சொல்லி ரசிக்க வைத்தார்.யுவன் கமலை போல மிமிக்ரி செய்து எல்லோரையும் சிரிக்க வைத்தார்." பா " , " அழகர் சாமியின் குதிரை " போன்ற படங்களின் பின்னணி இசையும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன
பிரகாஸ்ராஜ் தொகுத்து வழங்கிய ஜெயா டி.வி யின் "என்றென்றும் ராஜா" லைவ் இன் கான்சர்ட்டின் சில முக்கிய அம்சங்கள் இதோ :

 குரு வணக்கத்துடன் துவங்கிய கான்சர்ட் இசைஞானியின் குரலில்
"ஜனனி ஜனனி" யில் ஆரம்பித்து எஸ்.பி.பி. யின் குரலில் " இளமை இதோ இதோ " வில் முடிவடைந்தது

"அம்மா என்றழைக்காத" பாடலை பாட கே.ஜே.யேசுதாசை இசைஞானி அழைத்தவுடன் கூட்டத்தில் ஒரே கரகோஷம் ... " என் இனிய", "பூவே செம்பூவே" போன்ற மெலடி பாடல்களை பாடிய கே.ஜே முடிவில் "வச்ச பார்வை" என்ற குத்து பாடலையும் பாடி ரசிகர்களை அசர வைத்தார் ... " பூவே " பாடலில் இசை முடிவதற்கு முன்னரே இவர் பாட ஆரம்பித்து விட்டதால் அரங்கத்தில் பெரிய சலசலப்பு , பின் இருமுறை அவர் பாடிய பிறகே சலசலப்பு அடங்கியது ... பாடகரையும் , பாடல் வரிகளையும் தாண்டி இசைஞானியின் பின்னணி இசையின் மேல் ரசிகர்கள் வைத்திருக்கும் வெறித்தனமான பக்திக்கு இந்த சம்பவம் சிறந்த உதாரணம்

      இவரை நேரே பார்க்காதவர்கள் குரலை மட்டும் கேட்டால் நிச்சயம் இருபத்தைந்து வயதிற்கு மேல் சொல்ல மாட்டார்கள் ... அறுபத்தைந்தை தாண்டியும் குரலை அதே இனிமையில் வைத்திருக்கும் எஸ்.பி.பி யே ஷோவின் ஹைலைட் ... கான்சர்டில் அதிக பாடல்கள் பாடியவரும் இவரே...
" நானாக நானில்லை " யில் ஆரம்பித்து " மடை திறந்து " , " கண்மணியே காதல் " , " சுந்தரி கண்ணால் " என்று மெலடிகளால் நம்மை கட்டிப் போட்டவர் " இளமை இதோ " வில் முடிக்கும் போது ஆட வைத்துவிட்டார் ... பாடல்களுக்கு நடுவில் எஸ்.பி.பி யின் இம்ப்ரோவைசெஷன் அருமை ***

    இசைஞானி தன் குரலில் " ஜனனி " , " நான் தேடும் " , " ஒரு ஜீவன் " , அவரே முதன் முதலில் எழுதிய " இதயம் ஒரு கோவில் " என்று பாடல்கள் பாடியதோடல்லாமல் நடு நடுவே சிம்பொனி , பாடல் கம்போசிங்கில் பாரதிராஜா எப்படி பேசுவார் என்றெல்லாம் சுவைபட விசயங்களை சொல்லி ரசிக்க வைத்தார் ... தொகுத்து வழங்க வேண்டிய பிரகாஷ்ராஜும் ஒரு பார்வையாளராக இதை ஓரமாக நின்று ரசித்துக்கொண்டிருந்தார்

      உலகநாயகனால் நேரில் வர முடியாததால் அவர் பேசியதை வீடியோவில் காட்டினார்கள் ... கமல் பாடிய " சுந்தரி நீயும் " பாடலை ஹரிச்சரனும் , "நினைவோ ஒரு பறவை " , " ராஜா கைய வச்சா" பாடல்களை யுவனும் பாடினார்கள் ... யுவன் கமலை போல மிமிக்ரி செய்து எல்லோரையும் சிரிக்க வைத்தார்

 தன் வசீகரிக்கும் குரலில் " சின்ன கண்ணன் " பாடலை பாடி முடித்தவுடன் பால முரளி கிருஷ்ணாவும் இசைஞானியும் இறுக தழுவிக்கொண்ட காட்சி உருக்கமாக இருந்தது ... பாடலை கேட்கும் போது ஜேம்ஸ் வசந்தனின் "கண்கள் இரண்டால் " பாடல் நினைவிற்கு வந்தது.
சின்ன குயில் சித்ரா " புத்தம் புது காலை " , " பருவமே " , " சுந்தரி " உட்பட பல பாடல்களை பாடி உருக வைத்தார்

ஹரிஹரன் " நீ பார்த்த" பார்வையில் ராகத்தை மாற்றினாலும் குரலில் கிறங்கடித்தார் ... " என் மன வானில் " பாடலை சுருதி பிசகாமல் பாடினாலும் தமிழ் உச்சரிப்புகளை கொஞ்சம் கொலை செய்தார்

 தீபன் சக்ரவர்த்தி - உமா ரமணன் குரலில் " பூங்கதவே " , கார்த்திக் - நான்சி குரலில் " ஏதோ மோகம் " , ஸ்ரீராம் குரலில் " இளங்காத்து வீசுதே " , பவதாரிணி குரலில் " கும் சும் " ஹிந்தி பாடல் இவையெல்லாம் சொக்க வைத்த மற்ற பாடல்கள் சிம்பொனி பின்னணியில் இசைஞானி பாடிய " இதயம் போகுதே " இரண்டே வரிகளானாலும் இதயத்தை வருடியது ..." பா " , " அழகர் சாமியின் குதிரை " போன்ற படங்களின் பின்னணி இசையும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன

 " சீனி கம் " , " பா " போன்ற படங்களின் இயக்குனர் பால்கி இந்தியாவிலேயே பின்னணி இசையில் உண்மையான இசை இயக்குனர் இசைஞானி ஒருவர் தான் என்று புகழாரம் சூட்டியதோடு மட்டுமல்லாமல் இவர் பின்னணி இசையிலிருந்து தழுவி பல பாடல்களுக்கு இசையமைக்கலாம் என இளம் இசையமைப்பாளர்களுக்கு டிப்சும் கொடுத்தார்...இதை ஏற்கனவே பல இசையமைப்பாளர்கள் செய்து கொண்டு தானிருக்கிறார்கள்

   ஆறு வருடங்களுக்கு முன் இதே அரங்கத்தில் நடந்த இசைஞானியின் முதல் கான்சர்டில் இடம்பிடித்த மனோ , சாதனா சர்கம் , ஸ்ரேயா கோசல் போன்றோர் இதில் மிஸ்ஸிங் ... அதே போல் சினிமா பாடல்கள் தவிர இசைஞானியின் கீதாஞ்சலி உட்பட மற்ற ஆல்பங்களிலிருந்து பாடல்கள் இடம் பெறாததும் சற்று ஏமாற்றமே

 கமல் தன் வீடியோ உரையில் குறிப்பிட்டது போல இசைஞானி தன்னுடைய சோகத்தை மறைத்து தன் இசையின் மூலம் மற்றவர்களின் சோகத்தை குறைக்கிறார் என்பது தன்னுடைய துணைவியார் ஜீவா இறந்து சில காலமே ஆன நிலையிலும் தன் இசை வெள்ளத்தால் எல்லோரையும் நேற்று கவலைகளை மறக்க செய்த இந்த இசை நிகழ்ச்சியின் மூலம் புலனாகிறது.பிரகாஸ்ராஜ் தொகுத்து வழங்கிய, ஜெயா டி.வி வழங்கிய "என்றென்றும் ராஜா" youtube ல் பார்க்க (Endrendrum Raja - Musical Full show (2011-2012) கிளிக்குங்கள்.

Endrendrum Raja - Musical Full show. (2011-2012)


நினைவோ ஒரு பறவை  , ஜேசுதாஸ் பாடிய வச்ச பார்வை தப்பாதடி ஆகிய சில பாடல்கள் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பவில்லை! :((


பிரகாஸ்ராஜ் தொகுத்து வழங்கிய, ஜெயா டி.வி வழங்கிய "என்றென்றும் ராஜா" டவுன்லோட் செய்ய(MKV733MB) Download-  Endrendrum Raja - Musical Full show (2011-2012) கிளிக்குங்கள்:-)))

 மேலே இருக்கும் லிங்கில் உள்ள வீடியோவை விட இன்னமும் தரமான வீடியோவை தரவிறக்க... 
DVDவீடியோபகுதி ஒன்று 

DVDவீடியோபகுதி இரண்டு

11 comments:

Anonymous said...

FILE IS MP3 OR VIDEO


நன்றி

muthazhagan said...

அருமையானதொரு நிகழ்ச்சி . . . இளையராஜாவின் மற்ற மேடை நிகழ்ச்சிகளையும் upload செய்யுங்கள் . . .

Thomas Ruban said...

@wesmob said..
//FILE IS MP3 OR VIDEO //
MKV-VIDIO 735MB தான் நண்பா... இல்லை DIVX வேண்டுமானால்3.5GB ல் உள்ளது.
(தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.)

Thomas Ruban said...

@@muthazhagan said...
//அருமையானதொரு நிகழ்ச்சி . . . இளையராஜாவின் மற்ற மேடை நிகழ்ச்சிகளையும் upload செய்யுங்கள் . . .//

File ஹோசிடிங் தளங்களில் ஏற்பட்ட பிரச்சனையால் தரவேற்ற முடியவில்லை மன்னிக்கவும்.
Maestro Ilayaraja will perform a live-in concert in Chennai on 16 October titled Andrum Indrum Enrum for Jaya TV 2005ம் ஆண்டு "அன்றும் இன்றும் என்றும்" youtube ல் பார்க்க

பகுதி ஒன்று http://www.youtube.com/watch?v=8sVnrTX25m8
பகுதி இரண்டு http://www.youtube.com/watch?v=_fBx01gQvWs
பகுதி மூன்றுhttp://www.youtube.com/watch?v=wZyvxTmghbs
பகுதி நான்கு http://www.youtube.com/watch?v=YOA5p_CGy5I

(தரவிறக்கி)பார்த்து, மகிழுங்கள்...

PRABHAKAR said...

I WANT ENDRENRUM RAJA FULL MUSIC CONCERT (HD FILE) BY DVD FORMAT. CAN ANY BODY GUIDE ME ON THIS?

Thomas Ruban said...

நல்ல தரமுள்ள DVD வீடியோ
Endrendrum Raja Musical show. Part-1 (Xvid.1.6Gb)
பகுதி ஒன்று இங்கே சென்று depositfiles.com/files/xljyev54t தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

பகுதி இரண்டு(757Mb)விரைவில் தரவேற்றுகிறேன்.

Thomas Ruban said...

பகுதி இரண்டு(757Mb) இங்கே சென்று depositfiles.com/files/5fvk93njj தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

Anonymous said...

Can you please post this as a torrent it would be much more convenient.

vklbalu said...

i like it very much

Anonymous said...

Thank you very much for hard work nanba...I am not able to download the second part of this video from deposit files.Can you please help.......

Ashok kumar, Pudukkottai said...

Thank you very much for having uploaded this Programme.

Ashok.

Post a Comment

தைரியமாக கருத்துகளை கூறுங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு ஆட்டோ வராது...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More