Saturday, July 30, 2011

தங்கம் சொக்கத்தங்கம்- சில அறிந்த, அறியாத தகவல்கள்GOLD IS ALWAYS GOLD




இதுவரைக்கும் கண்டுபிடிக்க பட்ட தனிமங்களிலே தங்கமும் ,பிளாட்டினம் மட்டுமே காற்று, நீர், அமிலம் இதனால் பாதிக்கபடாது. தங்கம், பிளாட்டினம் போல் மற்ற தனிமங்களையும் மாற்றுவதற்கு வேதியியல் ஆராச்சியாளர்கள் ரொம்ப வருடங்களாக முயன்றும் இன்னும் வெற்றிப்பெற முடியவில்லை

ஒருத்தருடைய குணநலன்கள் நன்றாக இருந்தால் அவரை சொக்கத்தங்கம் என்கிறார்கள். (சொக்கத்தங்கம்= பரிசுத்தம் ) சொக்கத் தங்கம் என்றழைக்கப் படும் சுத்தமான தங்கம், 24 காரட் மதிப்புடையது. நேர்த்தியான நிலையில், 100 சதவீதம் சுத்தமான இத்தங்கம், நகை செய்ய உகந்தது அல்ல. நகைக்கு பயன்படுத்தப்படும் தங்கம் 22 காரட் உடையது என பரவலாக சொல்லப்படுகிறது. இது 91.67 சதவீதம் சுத்தமான தங்கம்.

ஒரு கிராம் தங்கம் விலை 2,201 ரூபாயைத் தாண்டிவிட்டது. மிக விரைவில் கிராம் 2,500 ரூபாயையோ, சவரன் 22 ஆயிரம் ரூபாயையோ எட்டினால் வியப்பதற்கில்லை.அந்த உயரம்,வெகு தூரமில்லை என்கின்றனர் நகை வியாபாரிகள்.

இப்படி நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலைக்கும் உள்ளூர் வியாபாரிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; மொத்தத்தையும் தீர்மானிப்பது, வெறும் 14 பேர் தான். பிரிட்டன் தலைநகர் லண்டனில், புல்லியன் எக்சேஞ்ச் ஒன்று இருக்கிறது. நம்மூர் பங்குச் சந்தைகள் மாதிரி, தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் சந்தை இது தான். இதில் 14 வங்கிகள் பங்குதாரர்களாக உள்ளன.

இவற்றில் 11 வங்கிகள் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவை. இவை தங்கச் சுரங்கங்களுடன் ஒப்பந்தம் செய்து, உற்பத்தி அளவுக்கேற்ப மார்க்கெட் விலையை நிர்ணயிக்கின்றன. உற்பத்தி மற்றும் தேவையை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்துவது இந்த புல்லியன் எக்சேஞ்ச் தான். இதில், உறுப்பினர்களாக உள்ள வங்கிகள் கூடி, இன்று இதுதான் விலை என்று அறிவித்தால், உலகம் முழுவதும் அன்றைய விலையாக, அதுவே தீர்மானிக்கப்படும்.

அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தாலோ, தங்கச் சுரங்கங்களில் உற்பத்தி குறைந்தாலோ, கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலோ, பணவீக்கம் அதிகரித்தாலோ, தங்கத்தில் முதலீடு செய்வதும், அதன் தேவையும் அதிகரித்துவிடுகிறது. உடனே அன்றைய மார்க்கெட் விலையை, லண்டன் புல்லியன் அதிகரித்துவிடுகிறது.

சீனாவிடம் இப்போது 3 லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள அன்னியச் செலாவணி கையிருப்பு உள்ளது. இதில் தங்கத்தின் அளவு 1.8 சதவீதமாகும்.

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியில் தங்கத்தின் பங்கு 11 சதவீதமும்.

சீனாவும் 11 சதவீதம் அளவுக்கு தங்கத்தை வாங்கி வைக்க முடிவு செய்தால், அந்த நாடு 6,000 டன் தங்கத்தை வாங்க வேண்டியிருக்கும். இது ஓராண்டில் சர்வதேச அளவில் உற்பத்தியாகும் தங்கத்தைவிட இரண்டு மடங்காகும்.
இதனால் சீனா தங்கம் வாங்க ஆரம்பித்தால், அதன் விலை பல மடங்கு அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை ரூ.13.95 லட்சம் கோடி அளவுக்கு அன்னியச் செலாவணி கையிருப்பு உள்ளது. இதில் தங்கத்தின் பங்கு 8.2 சதவீதமாகும்.
தங்கம் உற்பத்தியில் உலக அளவில் தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் உலக அளவில் தங்கம் உற்பத்தி ஆண்டிற்கு 0.7 சதவீதம் மட்டுமே அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் தங்கத்தை வாங்குவதில் முதலிடத்தில் உள்ளது இந்தியா, இரண்டாவது இடத்தில் உள்ளது சீனா. இந்த இரு நாடுகளும் உலகத்தில் விற்பனையாகும் தங்கத்தில் 33 சதவீதத்தை வாங்குகின்றன.




அமெரிக்காவின் கடன் கொள்கை காரணமாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது

உலகிலேயே சக்திவாய்ந்த அமெரிக்க அரசின் கஜானாவில் 73.76 பில்லியன் டாலர் உள்ளது. ஆனால் உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளிடம் 75.87 பில்லியன் டாலர் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் இரு முக்கிய கட்சிகள் தேசத்தின் கடன் வரம்பை உயர்த்துவது குறித்து சண்டைப் போட்டுக்கொண்டுள்ளன.

அமெரிக்காவின் கடன் நெருக்கடியைத் தீர்க்க விரைவில் ஒரு முடிவு எடுக்காவிட்டால், உலகப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்' என, சர்வதேச நிதியமைப்பின் (ஐ.எம்.எப்.,) தலைவர் கிறிஸ்டைன் லகார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில், பிரதிநிதிகள் சபையில் சபாநாயகர் ஜான் பாய்னர் நேற்று கொண்டு வருவதாக இருந்த மசோதா தாக்கல், பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த இழுபறியால், உலக முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். அமெரிக்கா தன் கடன் உச்சவரம்பான 14.3 டிரில்லியன் டாலரை, கடந்த மே மாதம் எட்டிவிட்ட நிலையில், கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சிகள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சித் தரப்பில் மேற்கொள்ளப்பட்டன.

தங்கம் விலை நிர்ணயத்தின் முக்கிய காரணியாக, ஆன்-லைன் வர்த்தகம் தான் செயல்படுகிறது. ஆன்-லைனில்,பேப்பர் கோல்டு எனப்படும் கோல்ட் இ.டி.எப பண்டுகளில் அல்லது கமட்டிசந்தையில் ஒப்பதந்தின் மூலம் எந்த நேரடி பணப் புழக்கமும் இல்லாமல், வெறுமனே, இன்றைக்கு எனக்கு இத்தனை கிலோ தங்கம் ஒதுக்கிவையுங்கள்' என பதிவு செய்துவிட்டால், உங்கள் கணக்கில் அந்தத் தங்கம் சேர்க்கப்படும்.
ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் தனி மனிதத் தேவைக்குப் பயன்படும் தங்கத்தை, அமெரிக்காவில் இருக்கும் ஒரே ஒரு வர்த்தகரே ஆன்-லைன் மூலம் பதிவு செய்துவிடுகிறார். இப்படித்தான், செயற்கை முறையில் தங்கத்தின் தேவை அதிகரிக்கப்படுகிறது. இந்தியாவில் தங்கம் வாங்குவோரில், 80 சதவீதம் பேர் நடுத்தர வர்க்கத்தினர் தான்.

20 சதவீதம் வாடிக்கையாளர்கள் தான் செல்வந்தர்கள். விலை உயர்வால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவது, நடுத்தர வர்த்தக பாமர சராசரி மக்கள் தான். இந்த அதிரடி விலை உயர்வால், தங்கள் அவசியத் தேவைக்கு கூட தங்கம் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். அந்த வகையில், தங்கம் விலையை 90 சதவீதம் ஆன்-லைன் வர்த்தகமும், 10 சதவீதம் மட்டுமே தனிமனிதத் தேவையும் நிர்ணயிக்கிறது.



பிரபல முதலீட்டு ஆலோசகரான நாகப்பன் ஐயாவின் ஆலோசனைகள்


தங்கத்தில் முதலீடு செய்வது என்று நீங்கள் முடிவெடுத்துவிட்டால், அதை தங்க உலோகமாக வாங்குவதற்கு பதிலாக தங்கப் பத்திரமாக வாங்குவதுதான் பாதுகாப்பு. தங்கத்தில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தாலும் செய்கூலி, சேதாரம், கற்கள் என்று எல்லாவற்றுக்கும் சேர்த்துதான் விலை நிர்ணயிக்கிறார்கள். அதை விற்கும்போது வாங்கிய விலையைவிட குறைவாகத்தான் தங்கத்தை மதிப்பிடுகிறார்கள்.

அதுவே, ETF முறையில் முதலீடு செய்தால் இப்படி எந்தப் பிரச்னையும் இருக்காது. தங்கத்தின் விலை ஏறுகிற போதெல்லாம் உங்கள் முதலீடும் லாபம் பார்த்துக் கொண்டே இருக்கும். விற்கும்போது அன்றைய தங்கத்தின் மதிப்பு என்னவோ அதே விலை உங்களுக்குக் கிடைக்கும். தங்கத்தின் விலை ஏற்றத்தை சமீபகாலமாக பார்த்து இருப்பீர்கள். ஏறுவதுதான் அதிகமாக இருக்கிறதே தவிர, விலை குறைவது ரொம்ப ரொம்பக் குறைவு. அதனால், தாராளமாக ETFஇல் முதலீடு செய்யலாம். இதற்கு ஒரு டிமேட் அக்கவுண்ட் தேவை. அதைத் துவங்கிவிட்டால் ஆன்லைனிலேயே நீங்கள் தங்கத்தை வாங்கலாம், விற்கலாம். 24கேரட் தங்கத்தின் விலை என்னவோ, அதே மதிப்புதான் ETFஇன் விலையும்.

ETF மாதிரியே இன்னொரு வகையிலும் முதலீட்டு வாய்ப்பு இருக்கிறது. இது National Spot Exchange Limited திட்டம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது எல்லாருக்கும் சுலபமாக இருக்கும். காசு இருக்கும்போதெல்லாம் தங்கம் வாங்குவது மாதிரிதான் இந்தத் திட்டமும். ஒரு கிராம் தங்கம் வாங்க நினைத்தால் அதே அளவு பணத்தை NSELஇல் முதலீடு செய்யலாம். எட்டு கிராம் அளவுக்கு மதிப்பு வந்தபிறகு 1 பவுனில் நகை வாங்க நினைத்தால் ஸ்டாக் மார்க்கெட்டில் கைமாற்றிவிட்டு நகையை வாங்கிக்கொள்ள முடியும். 100 சதவீதம் உங்கள் பணத்துக்கு கேரண்டி தரக்கூடியது. இதில் செய்கூலி, சேதாரம் என்று பணத்தை வீணாக்காமல், போட்ட பணத்தைவிட அதிகமாகவே கிடைக்கும். அதனால், தங்கம் வாங்கும்போது, அய்யோ பத்திரமாக பார்த்துக்கணுமே... தெருவில் யாராவது பறித்துக்கொண்டு போகாமல் இருக்கணுமே என்கிற பயம் எக்ஸ்சேன்ச் ட்ரேட் ஃபண்ட் (ETF), நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ் (NSEL) முதலீட்டில் இருக்காது.
தினமும் நடக்கிற கொலைகளிலும் வழிப்பறிகளிலும் மூன்றில் ஒன்றாவது தங்கத்துக்காக நடக்கிறது. அதைத் தவிர்க்க ஒரே வழி உலோகமாக வாங்கு வதற்கு பதிலாக, இப்படி பத்திரமாக வாங்கி உங்கள் முதலீட்டை பத்திரப் படுத்திக்கொள்ளுங்கள்.


அதிகரித்து வரும் தங்கம் விலை பற்றி பல்வேறு நிபுணர்களின் விஜய் டிவியில் கூறிய பல்வேறு கருத்துக்கள்:-







(தகவல்கள் பல்வேறு இணையத்தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளது. குறைகளை சுட்டிக்காட்டுங்கள்)
















0 comments:

Post a Comment

தைரியமாக கருத்துகளை கூறுங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு ஆட்டோ வராது...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More