மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இன்று, தொடரின் 54வது லீக் போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், சங்ககராவின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.
களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது.இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 19.4வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கும் தகுதி பெற்றது.தோனி அவுட்டாகாமல் 54 ரன்களுடனும், மோர்கல் அவுட்டாகமல் 14 ரன்களும் எடுத்தனர்.ரெய்னா 46 ரன்களுக்கும், பத்ரிநாத் 53 ரன்களுக்கும் முரளி விஜய் 13 ரன்களுக்கும், ஹெய்டன் 5 ரன்களுக்கும் அவுட்டாயினர்.
பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடிய நுழைவு வாயிலில் நடந்த குண்டு வெடிப்பு பீதியால்,பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடக்க வேண்டிய அரையிறுதி போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட்டது.
டிஸ்கி:சென்னை அணியின் வெற்றிக்கு பஞ்சாப் அணியின் படு மோசமான பீல்டிங் மற்றும் யுவராஜ்சிங்கின் பேட்டிங் உதவியாக இருந்தது.
LIVE-2
0 comments:
Post a Comment
தைரியமாக கருத்துகளை கூறுங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு ஆட்டோ வராது...