Monday, June 14, 2010

பிரபல டாக் ஷோவும் , பிராபல சாநீயும்

கடந்த பதிவில் மொக்கையான புதிர்கள் போட்டதாக , பட்டிக்காட்டான் பட்டியில் இருந்து கிராமத்தான், கண்டன மெயில் அனுப்பியதால் இந்த பதிவில் கொஞ்சம் ஐ.க்யூ புதிர்கள்!!!




புதிர் :-  1

    அது ஒரு பிரபல ஒரு டாக் ஷோ நிகழ்ச்சி, அதில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாஸ்வேர்ட் உண்டு . அவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். ஆனால் நம் பிராபல சொற்பொழிவாளரும் , எழுத்தாளரும்யான  சாநீக்கு அதில் எப்படியாவது கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை.


இன்று இரவு ஒன்பது மணிக்கு வி.டி.வி.யில் ஒளிபரப்பாகும் டாக் ஷோ   நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறேன் என்று பிளாக்ல் வேறு எழுதி விட்டார். ஆனால் அவருக்கு பாஸ்வேர்ட் தெரியாது.
எனவே வாசலில் ஒளிந்திருந்து கவனிக்கிறார்...
            
       அப்போது ஜெமோ  வருகிறார் .அவரிடம் வாட்ச்மேன் "12 " என்கிறார்.  உடனே அவர் "6" என்று சொல்ல, உள்ளே போக அவருக்கு அனுமதி  கிடைக்கிறது. அதேபோல் அடுத்து நானி வருகிறார் அவரிடம்   வாட்ச்மேன் "6" என்றதும்,  அவர் "3"என்கிறார் உள்ளே போக அவருக்கும் அனுமதி  கிடைக்கிறது.
   
    இதை ஒளிந்துகொண்டு கவனித்த நம்ம சாநீ 'இவ்வளவுதானா மேட்டர்' என்று ஸ்டைலாக வாட்ச்மேன் முன் போய் நிற்கிறார் . அவரிடம் வாட்ச்மேன் " 20" என்கிறார்  நம்ம சாநீ "10 "என்கிறார் பெருமையாக, உடனே சாநீக்கு தரும அடி கிடைக்கிறது அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

         உடனே போன் போட்டு  தன் நண்பர்கள் தமாஸ் ,லக்குக், நசிம், தரா மணி, அய்ஷா, கே சங்கர் போன்ற நண்பர்கள் தத்தம் வலைத்தளங்களிலும் இதை வெளியிட்டு சரியான பாஸ்வேர்ட் எது என்று கண்டுபிடிக்க வாசகர்களை வற்புறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறார்.


      ஆமா இன்று இரவு ஒன்பது மணிக்கு வி.டி.வி.யில் ஒளிபரப்பாகும் டாக் ஷோ   நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறேன் என்று பிளாக்ல் வேறு எழுதிவிட்டீர்களே என்ன செய்ய போகிறீர்கள்? என்று அவர்கள் கேட்க அதற்கு அவர், பேசும்போது மின்தடையால் நான் பேசியது மட்டும் நீக்கப்பட்டதாக என் பிளாக்ல் எழுதி விடுகிறேன்."என் வாசகர்கள் என்னை விட புத்திசாலிகள்... புரிந்துகொள்வார்கள்!!!!

ஆனி எனக்கு பாஸ்வேர்ட் அனுப்ப மறந்தாலும், எனக்கு 4000 ரூபாய்க்குக் காசோலை அனுப்பியிருக்கிறார் என்றார். அதற்கு 
கே சங்கர் சாநீ,  நீ திருந்தவே மாட்டியா? என்று போனை கட் செய்கிறார். 

சாநீ என்ன பாஸ்வேர்ட் சொல்லிருந்தால் தர்ம அடி கிடைக்காமல் இருந்திருக்கும்? சாநீக்கு எதற்க்காக 4000 ரூபாய்க்குக் காசோலை அனுப்பப்பட்டது?  சரியான பதிலை பின்னூட்டத்தில் எழுதுங்கள்.





==================================




2010-உலக கோப்பை கால்பந்து சிறப்பாக நடைபெற்ற வருகிறது. போட்டி  அட்டவணை, அணிகள் போட்ட கோல்கள் ஆகியவையும்
பிளாஷ் பைலாக இங்கு சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது.
==========================================





புதிர் :-2

ஒரு நேர்முகத் தேர்வு நம்ம ஜெமோவும், சாநீயும் கலந்துகொள்கிறார்கள் அவர்களிடம் அதிகாரி ஈஸியா பத்து கேள்விகள், கஷ்டமாக ஒரே  கேள்வி.  எது உங்கள் சாய்ஸ் ?  என்றார் . அதற்கு முதலில் சாநீ  ஈஸியா பத்து கேள்விகள் கேளுங்கள் என்றார்.
அவரிடம் ஈஸியா கேட்கப்பட்ட பத்து கேள்விகளில் ஒன்பதுக்கு   மட்டும் சரியான பதிலை கூறினார்.

      பின்பு ஜெமோ அழைக்கப்பட்டார் அவர் கஷ்டமாக ஒரே  கேள்வி
கேளுங்கள் என்றார் .கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா ?  இதுதான் அவரிடம் கேட்க்கப்பட்ட ஒரே கஷ்டமான கேள்வி . அதற்கு ஜெமோ சொன்ன 
பதில் முட்டையில் இருந்து கோழி வந்தது என்றார் .உடனே அதிகாரி 
அது எப்படி சொல்றீங்க ? கோழி இல்லாம எப்படி முட்டை வரும் ? என்று கேட்க, 

அதற்கு ஜெமோ என்ன பதில் சொல்லிருப்பார்,நேர்முகத் தேர்வில் யார் வெற்றி பெற்றார்? ,  சரியான பதிலை பின்னூட்டத்தில் எழுதுங்கள்.

==================================
 சிரிக்க சிந்திக்க:-1

டியர் சார்,

உங்களிடம் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொள்ளவே இந்தக் கடிதம். விஜய் டி.வி.யின் நீயா நானா குழுவில் பணியாற்றுபவர்களில் நானும் ஒருவன். என் பெயரை தயவு செய்து வெளியிட வேண்டாம். உண்மை நிலவரம் தெரிந்தால் என்ன எழுதுவீர்களோ தெரியாது.

ஒரு உதாரணம்:

நீயா நானாவின் நிகழ்ச்சி ஆண்டனி & கோபிநாத் பிரதர்ஸ் ரொம்ப பொய் சொல்றாங்க

ஐயா இந்த விஜய் டி,வி  ஓனர்  வெளிநாட்டுல இருக்காங்க. 
ஆண்டனி  கிட்ட கேட்டா அவர் "பாரின்" ல இருக்கார் அப்படிங்கிறார், 
கோபிநாத் கிட்ட  கேட்டா அவர் "US" ல  இருக்கார் அப்படிங்கிறாங்க , 
அவன் தம்பிய கேட்டா "அமெரிக்கா " ல இருக்கார் அப்படிங்கிறான்.
 

அது எப்படிங்கையா ஒரே ஆள் மூன்று எடத்துல இருக்க முடியும்!!!?
இதை உங்கள் இணைய தளம் பகிரங்கப் படுத்த வேண்டும்.
 

அன்புடன்,
   - - - - - - .

அன்பு நண்பருக்கு,
மிகவும் கண்டிக்கத் தக்கவை. ஆண்டனி & கோபிநாத் பிரதர்ஸ்க்கு  நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான். எல்லா மனிதர்களும் நீதி தேவதை முன்னால் சமமானவர்களே.
13.6.2010.
7.20 p.m.
(இந்தப் பதிவை எல்லா பதிவர்களும் தங்கள் வலைமனைகளில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்).
==================================



புதிர் :- 3

கும்பானி  தனது இரண்டு மகன்களுக்கு தனது சொத்தை பிரித்துக் கொடுக்க நினைத்து ஒரு போட்டி வைத்தார். நீங்க இரண்டு பெரும் உங்கள் காரில் இந்த ஊரில் இருந்து அடுத்த ஊருக்கு போகணும் . 'யாரோடு கார் ரொம்ப மெதுவாக  போகுதோ', அவங்களுக்கு சொத்தில் அதிகப் பங்கு தருவேன்  என்று வினோதமான நிபந்தனை விதித்தார் . 
இருவரும் மனதில் திட்டியபடி காரில் கிளப்பினார்கள் .

ஸ்லோ ரேஸ் என்பதால் அநியாயத்துக்கும் கார் மெதுவாக நகர்ந்தது .
ரொம்ப நாட்காளாக நடந்து(நகர்ந்து) கொண்டு  இருந்த போட்டியால் 
வேறுத்துப்போனர்கள். எனவே வழியில் சந்தித்த நாட்டாமையிடம் ,
இதற்கு என்ன தாங்க தீர்வு ? என்று யோசனை கேட்க, 

அவர்  இருவருக்கும் சேர்த்து ஒரு ஐடியா சொன்னார் .அதைக் கேட்ட அடுத்த நொடியே இருவரும் காரில் ஏறி செம ஸ்பிடாக  போனார்கள்.

அப்படி அந்த நாட்டாமை என்னதான் யோசனை  சொன்னார் ?
 சரியான பதிலை,பின்னூட்டத்தில் எழுதுங்கள்.
==================================
சிரிக்க சிந்திக்க:-2
 ஆங்கிலேயப் பத்திரிக்கையாளர் ஒருவர் காந்தியடிகளைப் பார்த்துப் பேசிக்கொண்டிருக்கும்போது …...
“ இந்தியமக்கள் உங்களை எப்படித் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர்?“
வேறு தலைவர்களே அவர்களுக்குக் கிடைக்கவில்லையா?
என்று கேட்டார்.

அதற்குக் காந்தியடிகள் புன்னகையுடன்
“உங்களைச் சமாளிக்க நானே போதும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்“
என்று சொன்னார்.

=================================

1-2. முதல் இரண்டு புதிர்களுக்கு சரியான விடை எழுதியவர்களில், குலுக்கல் முறையில் ஒருவர் தேர்ந்தேடுக்கப்பட்டு அவர்க்கு, இந்த ஜூன் மாதம் 31-ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நீல பேய் பீச் ரிஸார்ட்டில் காலை பத்து மணியிலிருந்து மறுநாள் காலை பத்து மணி வரை நம்ம பிராபலங்கள்யுடன், அவரவர் செலவில் கும்மி அடிக்காலாம்....
                       *****************

3. மூன்றாவது புதிருக்கு சரியான பதில் எழுதும் அனைவருக்கும், அவர்கள் நிறுவனத்தில் மாதம் ஒரு லட்சம் சம்பளத்துடன், கச்சா எண்ணை எடுத்து செல்லும் எண்ணைகப்பலில் வேலை. 

2 comments:

Btc Guider said...

ஒரு முடிவோடதான் களத்தில் இறங்கியிருக்கிற மாதிரி தெரியுது பதிவு மிக அருமை சார். இவ்வளவு நாளா ஏன் எழுதவில்லை தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றியுடன் ரஹ்மான்.

Thomas Ruban said...

//ஒரு முடிவோடதான் களத்தில் இறங்கியிருக்கிற மாதிரி தெரியுது பதிவு மிக அருமை சார். இவ்வளவு நாளா ஏன் எழுதவில்லை தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றியுடன் ரஹ்மான்.//

உங்கள் கருத்துக்கும்,ஆதரவுக்கும் நன்றி ரஹ்மான் சார்.

Post a Comment

தைரியமாக கருத்துகளை கூறுங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு ஆட்டோ வராது...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More