Monday, July 12, 2010

ஸ்பெயின் அணி"2010- FIFA உலக கோப்பையை" வென்று, சரித்திரத்தில் இடம் பெற்றது.











                  தென்னாபிரிக்காவில் ஒரு மாத காலம் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடர்ரின்,  நிறைவு விழா ஜோகனஸ்பர்க்கில் உள்ள சாக்கர் சிட்டி மைதானத்தில்இரவு 10.00 மணிக்கு மிகப் பிரமாண்டமாக   கலைநிகழ்ச்சிகளுடன்  தொடங்கியது.
 
 

          பிரபல பாப் இசைப் பாடகி ஷகீராவின் ஆடல், பாடலும் இடம்பெற்றது. உலக கோப்பை தொடரின் அதிகாரப்பூர்வ பாடலான வாகா...வாகா ஆப்ரிக்கா என்ற பாடலை பிரபல பாப் பாடகி ஷகிரா, ஆடிப் பாடி ரசிகர்களை கிறங்கடிக்கத்தார்.


                       FIFA  உலக கோப்பையை  சம்பியனுக்கு  முதல் பரிசாக
தங்ககோப்பையுடன் ரூ.140 கோடிகள்  கிடைக்கும். இரண்டாவது
இடம்  பிடிக்கும் அணிக்கு ரூ.111 கோடிகள் கிடைக்கும். அரை இறுதியில் தோல்வியடைந்த இரண்டு அணிகளுக்கும் தலா ரூ.92 கோடியும் , கால் இறுதியில் வெற்றிபெறத நான்கு அணிகளுக்கும் தலா ரூ. 36.8 கோடிகள், என FIFA உலக கோப்பையில்  பரிசாக வழங்கப்படுகிறது.





       
   Vs  


  


                     சர்வதேச கால்பந்து ரேங்கிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணியும், உலகின் "நம்பர்-2"அணியும் கடந்த 2008ல் "யூரோ" கோப்பை சாம்பியன ஸ்பெயினும் முதல் முறையாக இறுதிபோட்டியில் மோதின.

 முதல் பாதியில் நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் முரட்டுத்தனம் தலை தூக்கியது. ஆட்டத்தில் 5நிமிடத்தில் ஸ்பெயின் அணியினர் அடித்த கோலை நெதர்லாந்து கோல்கீப்பர் அற்புதமாக தடுத்தார். ஐந்து முறை மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது அதில் நெதர்லாந்துக்கு மூன்று முறையும் ஸ்பெயின்க்கு இரண்டு முறையும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.நெதர்லாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் அர்ஜென் ராபன்.  இவர் ஸ்பெயின் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். 
ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் ராபன் மின்னல் வேகத்தில் ஓடி வந்து கோல் அடிக்க பார்த்தார். அப்போது "பெனால்டி ஏரியா'வில் வைத்து ஸ்பெயின் வீரர் புயோல் தனது கையால் சுற்றி வளைத்து ராபனை தடுத்தார்(பார்க்க-படம்). இதனை பயன்படுத்தி ஸ்பெயின் கோல்கீப்பர் கேசிலாஸ் பந்தை வெளியே அனுப்பினார். இதையடுத்து புயோல் "பவுல்' செய்ததாக ராபன் கடுமையாக வாதாடினார். உடனே ராபனுக்கு "எல்லோ கார்டு' காட்டினார் நடுவர். ஆனால், புயோலுக்கு தண்டனை வழங்கவில்லை.
         இரண்டாவது பாதியில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை இரு அணி வீரர்களும் வீணடித்தால் கூடுதலாக 30 நிமிடம் கொடுக்கப்பட்டது.
      
                 கூடுதல் நேரத்தின் 25-வது  நிமிடத்தில் ஸ்பெயின் ஆண்ரியஸ் இனிஸ்டா  வரலாற்று சிறப்புமிக்க கோல் அடித்தார். 

ஸ்பெயின் கடந்து வந்த பாதை:-
            
                             ஸ்பெயின் அணியை பொறுத்தவரை லீக் சுற்றில் சுவிட்சர்லாந்துக்கு எதிராக 1-0 என அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதற்கு பின் மகத்தான எழுச்சி கண்டது. சிலி போர்ச்சுகல் போன்ற வலிமைமிக்க அணிகளை வரிசையாக வென்றது. அரையிறுதியில் ஜெர்மனியை வீழ்த்தி, இறுதி போட்டிக்கு அதிரடியாக நுழைந்தது. பந்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் பெரும்பாலான நேரம் வைத்திருப்பது, சரியான வீரருக்கு சரியான திசையில் "பாஸ்' செய்வது போன்றவை ஸ்பெயின் அணியின் பலம். அலோன்சா, செர்ஜியோ பஸ்கட்ஸ், ஆண்ட்ரஸ் இனியாஸ்டா, சேவி ஆகியோர் மத்திய களத்தில் பம்பரமாக சுழன்று ஆடுகின்றனர். இவர்கள், எதிரணியை மடக்கி முன்கள வீரரான டேவிட் வில்லாவுக்கு பந்தை கொடுக்கின்றனர். அவர், மிக துல்லியமாக கோல் அடித்து, அசத்தல் வெற்றி தேடி தருகிறார். ஸ்பெயின் இதுவரை 7 கோல் அடித்துள்ளது. இதில் டேவிட் வில்லா மட்டும் 5 கோல் அடித்துள்ளார் ஆனால், இறுதி போட்டியில் சரியாக விளையாடவில்லை. கார்லஸ் புயால், ஜெரார்டு பிக் போன்றோர் தற்காப்பு பகுதியில் அரணாக செயல்பட்டனர்.

          
            இறுதிபோட்டியில் கடும் போராட்டத்துக்குப் பிறகு ஸ்பெயின் சிறப்பாக விளையாடி1-0 கோல் கணக்கில் , 2010- FIFA  உலக கோப்பையை  சம்பியன் பட்டத்தையும்,  முதல் பரிசாக "தங்ககோப்பையுடன் ரூ.140 கோடிகளையும்" கைப்பற்றி, முதல் முறையாக 2010-"FIFA  உலக கோப்பையை"  வென்று, உலக கோப்பை கால்பந்து சரித்திரத்தில் இடம் பெற்றது.   உலக கோப்பை கால்பந்தில் உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் பூட் விருது ஜெர்மனியின் தாமஸ் முல்லருக்கு வழங்கப்பட்டது.                                 


                                           **************************

ஆறு முக்கிய  விருதுகள்

Golden Ball-தங்கப்பந்து 

உருகுவேயின் போர்லானுக்கு
(சிறந்த பத்துப் பேர் போட்டியில் 23.4-சதவிகித ஓட்டுகள் பெற்று முதலிடம் பெற்றார்.)

*********************
Golden Boot-தங்கப் பாதணி


ஜெர்மனியின் தாமஸ் முல்லர்

(உலக கோப்பை தொடரில் அதிக கோல் அடித்தவர்களுக்கு கோல்டன் "ஷூ' விருது வழங்கப்படும்-5 கோல் மற்றும் கோல் அடிக்க உதவியது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது )

***********
Golden Gloves-தங்கக் கையுறை
ஸ்பெய்ன் அணியின் தலைவரும் கோல் காப்பாளருமான ஐகர் காசியாஸ்
(ஏழு ஆட்டத்தில் இரண்டு கோல்கள் மட்டுமே எதிர் அணியிடம் இருந்து வாங்கி இருந்தார். )
***************
சிறந்த இளம் வீரருக்கான விருது
ஜேர்மனிய வீரர் முல்லர்
(ஜெர்மனி அணி மூன்றாம் இடம் பெற இவரது அபார ஆட்டமே முக்கிய காரணமாக அமைந்தது.)
**********
FIFA Fair Play award


ஸ்பெயின்
(உலககோப்பை தொடரில், மிக நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணிக்கான விருதை ஸ்பெயின் வென்றது.)
************




FIFA Award for the Most Entertaining Team



                      *************************
ஆக்டோபஸ் -Vs- மணி என்ற கிளி
         
             இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்லும்என்று ஆக்டோபஸ் கணித்திருந்தது.

     இதேப்போல சிங்கப்பூரை சேர்ந்த மணி என்ற கிளி, இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெறும் என்று  ஆரூடம் கூறியிருந்தது. 


                  


ஆக்டோபஸ் சாஸ்திரம்  பலித்தது !!
  
                                *******************

அடுத்த உலககோப்பை கால்பந்துப் போட்டிகள் 2014- ம் வருடம் பிரேசில் நாட்டில் நடக்க உள்ளது. அடுத்த உலககோப்பையிலும்
ஆக்டோபஸ் பயன்படுமா!!!








0 comments:

Post a Comment

தைரியமாக கருத்துகளை கூறுங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு ஆட்டோ வராது...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More