செல்போன் குறைந்த விலையில் கிடைப்பதால், பாமர மக்கள் நிறையப் பேர்
வாங்குவார்கள் நிறைய பேசுவார்கள். "செல் இல்லாத வாழ்க்கை நில் ஆகிவிடும்".
பெரும்பாலான செல்போன் கம்பெனிகளும் தற்போது நஷ்டத்தில்
ஓடிக்கொண்டிருக்கின்றன! இருந்தாலும் பல சலுகைகள் தருகிறது.
உலகிலேயே செல்போனை "மகா,மகா கேவலமாக"
பயன்படுத்துபவர்கள் இந்தியர்கள் தான். பொது இடத்தில் அவர்கள் மொபைல் ரிங்டோன்
சத்தத்திற்கு மொத்த உலகமே திரும்பிப் பார்க்கும். இந்தியாவின் வருங்கால தூண்கள் ஹாய் எனத் தொடங்கி பை என முடிப்பதற்குள் குறைந்தது சில மணி நேரம்
வெட்டியாக வீணாகிவிடும்.