Tuesday, May 25, 2010

செய்தியும், கோணமும்

(மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு 2-வது முறையாக பதவியேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில்  நிருபர்களுக்கு விரிவான பேட்டியளித்தார்.
 சுமார் ஒன்றே கால் மணி நேரம் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் பதிலளித்தார்.)(நான் புரிஞ்சிகிட்டது)


செய்தி :-விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருவது கவலை அளிக்கிறது. பண வீக்கம் அதிகமாக இருக்கிறது. இதை கட்டுப்படுத்தி சாதாரண மக்களை பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதவாக்கில் பண வீக்கம் வெகுவாக கட்டுக்குள் வந்துவிடும்.

அதனாலே  மக்கா டிசம்பர் மாதம் வரை யாரும் அத்தியாவசிய பொருட்கள் எதுவும் வாங்காமல் வயிற்றில் ஈரதுணியோடு  இருங்க..... (PM ஜோசியம் எல்லாம் எப்ப கத்துகிட்டாற்!!!)


செய்தி :-மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. இது கவனத்தில் கொள்ளப்படும். இதுபற்றி ஆய்வு செய்ய கேட்டுள்ளேன்.

ஆமா  ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு (அரசியல்வாதிக்கு) கொண்டாடம் என்று எ(உ)ங்களுக்கு நல்லாவே தெரியும் .


செய்தி :-2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு, அந்த நேரத்து கொள்கைகள் அடிப்படையில் நடந்துள்ளது. அதாவது முந்தைய பாஜக கூட்டணி அரசு உருவாக்கிய கொள்கைகள், விதிமுறைகளின்படி தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்துள்ளது. இதில் ராஜா மீது எந்தத் தவறு இல்லை. நானும் அமைச்சர் ராசாவை அழைத்துப் பேசினேன். அவர் என்னிடம் முழு விளக்கம் கொடுத்தார்.

உ(எ)ங்க  கட்சிக்கு சேரவேண்டிய பங்கு கரெக்டா  வந்து சேர்த்திருச்சினு சொல்றிங்க புரியுது. 

செய்தி :-மத்திய அமைச்சரவையில் சேர ராகுல் காந்தி எப்போது விருப்பம் தெரிவித்தாலும், அவருக்கு உரிய பதவி கொடுக்கப்படும். காங்கிரஸ் கட்சி முடிவெடுத்தால் யாருக்காகவும் (ராகுல் உள்பட) நான் பிரதமர் பதவியை விட்டு விலகி மகிழ்ச்சியுடன் வழி விட தயாராக இருக்கிறேன்.

கௌரவமாக PM சொல்லிக்கிட்டு வெளிநாட்டு தலைவர்களுடன் கைகுலுக்கியிட்டு இருந்திங்க அதுக்கும் இப்போ  ஆப்பா!

செய்தி :-நக்சலைட்டுகள் உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் சவாலாக உள்ளனர். இந்தப் பிரச்சனையை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. தீவிரவாதிகளையும், நக்சலைட்டுகளையும் கட்டுப்படுத்தத் தவறினால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

நக்சலைட்டுகள் ஏன் எங்க வேலையை செய்யறாங்க அதுக்கு தான் அரசியல்வாதிகளும்,  அரசியல்கட்சிகளும் இருக்கே!

செய்தி :-சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு. அதில் அரசு தலையிடுவது இல்லை.

ஆமா  எதிரி (எதிர்கட்சி) மீது நடவடிக்கை எடுக்கும்போது மட்டும் அதில் அரசு தலையிடுவதுயில்லை!!!

செய்தி :-தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசியல் கட்சிகள், தொழில் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் துறை கொஞ்சம் உருப்படியா இருப்பதும் புடிகலையா...

செய்தி :-நான் வாரம் ஒரு முறை சோனியாவை சந்தித்து ஆலோசித்து வருகிறேன். அவருடைய ஆலோசனையை பெற்று அவரின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகிறேன் என்றார் பிரதமர்.

இப்ப  புரியுதா மக்கா இத்தனை பிரச்சினைகளுக்கும் நான் காரணம் இல்லை என்று!!! 

டிஸ்கி;- வாழ்க  ஜனநாயகம்....

2 comments:

பட்டாபட்டி.. said...

வளர்க பணநாயகம்..ஹா.ஹா

Thomas Ruban said...

//பட்டாபட்டி.. said...

வளர்க பணநாயகம்..ஹா.ஹா//

நன்றி நண்பரே...

Post a Comment

தைரியமாக கருத்துகளை கூறுங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு ஆட்டோ வராது...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More