Tuesday, May 11, 2010

இந்தியாவின் விஸ்வநாதன்ஆனந்து 4வது செஸ் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்



பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், பல்கேரியாவின் வெசலின் தபலோவ் மோதும், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. மொத்தம் 12 சுற்றுக்கள் கொண்ட இப்போட்டி.


செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இதுவரை நடந்த 11 ஆட்டங்களில் (சுற்றுகளில்) ஆனந்து மற்றும் வெசலின் தபலோவ் இருவரும் 5 ½ : 5 ½ சமபுள்ளிகள் எடுத்திருந்தனர். எனவே இன்று நடந்த 12வது சுற்றில் யார் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்ப்பு செஸ் ரசிகர்கள் இடையே இருந்தது.

இதில் வெசலின் தபலோவ் வெள்ளைநிற காய்களுடனும் ஆனந்து கருப்புநிற காய்களுடனும் விளையாடினார்கள்.



39வது,40வது மூவில்ஆனந்த் வெல்ல கிடைத்த அருமையான வாய்ப்பு இருந்தது தவற விட்டார். இருந்ததாலும்,


இதில் ஆனந்து 56வது நகர்த்தலுக்கு பிறகு ஆனந்து வெற்றி பெற அதிகம் வாய்ப்புள்ளதால், வெசலின் தபலோவ் ஆட்டத்தை முடித்து கொள்வதாகவும் கூறினார் ஆனந்தும் ஒப்புக்கொண்டார்.இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்து 6½புள்ளிகளுடன் வெற்றி பெற்று, நான்காவது உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்.
சுற்றுகள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12

விஸ்வநாதன் ஆனந்து 0 1 ½ 1 ½ ½ ½ 0 ½ ½ ½ 1 = 6½

வேசெளிண் டோபலாவ் 1 0 ½ 0 ½ ½ ½ 1 ½ ½ ½ 0 = 5½


சுரதா யாழ்வாணன் வழங்கும் சதுரங்கம் விளையாடுவது எப்படி?தமிழில் இங்கே சதுரங்க விளையாட்டை புதிதாக தொடங்குபவருக்கு எழும் சந்தேகம் முதல் அனுபவசாலிக்கு எழும் சந்தேகம் வரை இங்கு விடை உண்டு.உங்கள் சந்தேகம் அனைத்துக்கும் இங்கும் விடைகிடைக்கும். புத்திசாலிதனமும் தந்திரமும் தான் இந்த விளையாட்டின் வெற்றியை நமக்கு கொடுக்கும். உங்கள் குழந்தைகளின், புத்திசாலிதனம் வளர சதுரங்க விளையாட்டை கற்று கொடுங்கள்.

0 comments:

Post a Comment

தைரியமாக கருத்துகளை கூறுங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு ஆட்டோ வராது...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More