Tuesday, June 29, 2010

பேசுங்கள்..பேசுங்கள்...பேசிக்கொண்டே இருங்கள்



              செல்போன் குறைந்த விலையில் கிடைப்பதால், பாமர மக்கள் நிறையப் பேர் வாங்குவார்கள்  நிறைய பேசுவார்கள். "செல் இல்லாத வாழ்க்கை நில் ஆகிவிடும்". பெரும்பாலான செல்போன் கம்பெனிகளும் தற்போது  நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன! இருந்தாலும் பல சலுகைகள் தருகிறது.

                உலகிலேயே செல்போனை "மகா,மகா கேவலமாக" பயன்படுத்துபவர்கள் இந்தியர்கள் தான்.  பொது இடத்தில் அவர்கள் மொபைல் ரிங்டோன் சத்தத்திற்கு மொத்த உலகமே  திரும்பிப் பார்க்கும். இந்தியாவின் வருங்கால தூண்கள் ஹாய் எனத் தொடங்கி பை என முடிப்பதற்குள் குறைந்தது சில மணி நேரம் வெட்டியாக வீணாகிவிடும்.
             
            தேவை இல்லாமல் லவுட் ஸ்பீக்கரை உபயோகிக்காதீர்கள். செல்போனில் பேசிகொண்டே ரோடு(அ)தண்டவாளத்தை  கிராஸ் செய்யாதீர்கள். பெண் ஊழியர்களிடத்தில் பேசுகையில் பேச்சில் மரியாதையும், கூடுதல் கவனமும் இருக்கட்டும். 

           சாலையில் வண்டி ஓட்டும்போது செல்போனில் பேசக்கூடாது. பொதுஇடங்களில் சத்தம்போட்டு 'சானிட்டரி, நாப்கின்' போன்ற விஷயங்களை பேசக்கூடாது. இந்த செல்போனை வச்சுக்கிட்டு இவர்கள் பண்ற அழிச்சாட்டியம் இருக்கே!...

 முதலில் போன் ரிசிவரை காதில் வைத்து பேசினோம்....



செல்போன் வந்த பிறகு செல்போனை காதில் வைத்து பேசினோம்....



          ஹெட் போன் வந்த பிறகு செல்போனில் ஹெட் போன்பின் சொருகி ஹெட் போன்னில் பேசினோம். அதன்பின் ப்ளூடூத் இயர்போன் உபோயோகித்து பேசினோம்..


இப்படியே  பேசிக்கொண்டு இருந்தால், கடைசியில் என்ன ஆகும் தெரியுமா....




  
இன்னும் கொஞ்சம் நாள் கழித்து பார்த்தால்,செல்போன்,ஹெட் போன்,ப்ளூடூத் இயர்போன், எதுவும் இல்லாமல்" லூசுத்தனமா  தனக்குதானே பேசிக்கொண்டு போவார்கள்".
             எனவே, அளவோடு பேசி நலமுடன் வாழுங்கள். செல்போன் டவர்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவுக்கு கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். புற்று நோய் வர வாய்ப்புகள் உள்ளது. செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். செல்போனை எப்போது பயன்படுத்துவது என்கிற தெளிவு மட்டும் இருந்துவிட்டால், எந்த ஆபத்தும் நம்மை நெருங்க முடியாது.
ஹைய்யோ முடியல.....



                               ***********************




2010-உலக கோப்பை கால்பந்து சிறப்பாக நடைபெற்ற வருகிறது. போட்டி  அட்டவணை, அணிகள் போட்ட கோல்கள் ஆகியவையும்
பிளாஷ் பைலாக
இங்கு சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது.

 



SOUTH AFRICA 2010 மென்பொருள்
File -> Online Updat கிளிக் செய்து போட்டிகளின் முடிவுகளை உடனுக்குடனே அப்டேட் செய்து
கொள்ளலாம்

 



கால்பந்துLIVE-1
கால்பந்துLIVE-2











4 comments:

Btc Guider said...

நானெல்லாம் அப்படி பேசுவது கிடையாது சார். நான் ரெம்ப நல்ல பையனாக்கும்.பகிர்வுக்கு நன்றி சார்.

Thomas Ruban said...

//நானெல்லாம் அப்படி பேசுவது கிடையாது சார். நான் ரெம்ப நல்ல பையனாக்கும்.//
இந்த பூனையும் பால் குடிக்காது என்கிறீர்கள்,சத்தியமா
நம்புகிறேன்.
உங்கள் தொடரந்த ஆதரவுக்கும்,காருத்துக்கும் நன்றி
ரஹ்மான் சார்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கலக்கல்

Thomas Ruban said...

உங்கள் ஆதரவுக்கும்,கருத்துக்கும் நன்றி பட்டாபட்டி சார்...

Post a Comment

தைரியமாக கருத்துகளை கூறுங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு ஆட்டோ வராது...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More